Wednesday, April 8, 2020



ஔவியம் - அவ்வியம் (பொறாமை)

காவிக்கண்டின் சுவையை அள்ளி மேலே பூசிய வர்ணஜால கோலமா நீ....
என்றும் கவிஞனின் பேனா  நுனியில் அசைந்து நடனம் ஆடுகிறாயே ....
சிறுவர் வேட்டையாடி வீட்டில் உன்னை அடைத்து விளையாடுகிறார்களே....
காந்தழகி குமரிபெண்ணின் அழகிற்கு உவமையாம் நீ...
குழந்தைக்கு பாலுட்ட வேடிக்கையாகவும் நீ....
சுட்டெறிக்கும் நான் திக்கிபோனேன்....
ஔவியமாய் (அவ்விமாய்)  சூரியன்...
கிறங்குகிறேன்....

Thursday, March 26, 2020


காவிக்கண்டாய் (மிட்டாய்/ சாக்லெட்)

எம் இரு கரம் வலிக்க பஞ்சு துயில் தொட்டிலை ஆட்டினேன்...
பூமி பந்து கண்கள் இரண்டும் சிவந்ததே அமுது நீராய்...
வண்ணங்களும் சத்தமும் காற்றில் ஆடும் பொருள்களை கொடுத்தேன்...
உலகம் அதிரும் அளவு சீறி கத்தினாய்..
அன்னை நான் அழுத்தி முத்தமிட்டேன்..
அமுது முகம் மலர்ந்ததே..
நீயே என்..

காவிக்கண்டாய்..

Tuesday, March 24, 2020


அரும்பின் குறும்பு.. 

கருகொண்ட தருணம் முதல்
தொடங்கியதே பயணம்...
பாவாடை கட்டும் தருணமோ
இறுக்கி கட்டினால் வழிக்குமோ
என்று அஞ்சும் மனது..
அசைபோட்டு நகர்ந்த
மகப்பேறு மாதங்கள்..
ஆனந்ததின் எல்லை..
உச்சி முதல் பாதம் வரை
வலி உணர்ந்தேன்..
நீ வர போகும் தருணம்...
அழு குரல் எழும்பியதல்
வசந்தம் இல்லத்தில் மலர்ந்ததே..
பிடித்ததை சாப்பிட மறுத்தேன்...
உனக்கு சளி பிடிக்குமென்று..
ஆசையாய் வளர்ந்த கூந்தல்..
அதை குளியாட்ட யோசித்தேன்..
உனக்கு இருமல் வருமென்று..
சாப்பிடும் போது மலம் கழித்தாய்..
சுத்தம் செய்துவிட்டு மறுபடி சாப்பிடுவேனே அன்பே..
என் இதயம் பரிசளித்த பட்டுபுடவையில் சிறுநீர் அபிஷேகம் செய்தாய்..
இரசித்து கொண்டே
 துவைத்தேனே கண்ணே..
குளியலறையில் ஆயிரக்கணக்கில் போர் புரிந்தோமடா..
அழகாய் உன்னை வர்ணித்து கொஞ்சுவேன் நாளும்..
சிலையாய் சிங்காரமாய்
அலங்கரிப்பேனே உன்னை..
பதிலுக்கு..
உன் அப்பாவிற்கு முத்தமிட்டு.
கேளியாய் என்னை பார்ப்பாயே..

அரும்பின் குறும்பு

என்றும் சுகமே..

Saturday, March 21, 2020



அவள் அதிகாரம். 

பட்டங்கள் வென்று சரஸ்வதி
ஆனால் அவள்...
சிறகுகள் கொண்டு விண்ணில்
பறந்தால் அவள்..
கலைகள் கற்று கலைமகளாய்
மாறினால் அவள்..
சாகசம் புரிந்து பார்வதிதேவியாய்
வாழ்ந்தாள் அவள்..
பணியும் தொழிலும் கொண்டு செல்வமகளுமானால் அவள்..
ஆனால்...
 துச்சாதனனால் துயில் இழுக்க பட்டு பாஞ்சலியாகவும் இருக்கிறாள் அவள்..
இராவணனால் கடத்தப்படும் சீதையாவும் இருக்கிறாள் அவள்..


அவள் என்றும்
ஒரு அதிகாரமே..


Thursday, March 19, 2020


காதல் ரோஜா.. 
கண்ணழகி விழிப்பதோ
ரோஜா மொட்டு
மலராய் விரிவதுபோல..
என்னவளின் புன்னகையோ
ரோஜா இதழில்
படிந்த பனித்துளிபோல...
அவளின் மனமோ
ரோஜா மலரில்
அடங்கியிருக்கும் தேன்போல...
காந்தழகி பயணமோ
ரோஜா பூவின்
முட்கள் சூழ்ந்த
காம்பு போல..
என் உயிர் ரோஜாவிற்கு
இந்த காதல் ரோஜா சமர்ப்பணம்..